நத்தம் அருகே பலசரக்கு கடையில் பணம், பொருட்கள் திருட்டு
நத்தம் அருகே, பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நத்தம்,
நத்தம் அருகே பரளியில், பலசரக்கு கடை நடத்தி வருபவர் நூர்முகமது (வயது 62). சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான். பின்னர் கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும், ரூ.10 ஆயிரத்தையும் திருடி சென்றான்.
மறுநாள் கடையை திறக்க வந்த நூர்முகமது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மர்ம நபர் கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும், அருகில் உள்ள ஜவுளிக்கடை கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி விட்டு கடைக்குள் சென்று பணம், பொருட்களை திருடியது தெரியவந்தது. இதற்கிடைய நூர்முகமது கடைக்குள், ரகசியமான இடத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
அந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் முகமூடி அணிந்து கடைக்குள் வருவது போன்றும், பணம் பொருட்களை திருடி செல்வதும் போன்றும் காட்சி பதிவாகி இருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story