நியூட்ரினோ திட்டத்தை தடுப்பது எளிதல்ல: வீட்டுக்கு ஒருவர் போராட முன்வர வேண்டும் - வைகோ
நியூட்ரினோ திட்டத்தை தடுப்பது எளிதான காரியம் இல்லை என்றும், இத்திட்டத்தை எதிர்த்து வீட்டுக்கு ஒருவர் போராட முன்வர வேண்டும் என்றும் தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
தேனி,
நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் கடந்த 31-ந்தேதி நடைபயணம் தொடங்கினார். 4-வது நாளான நேற்று ஆண்டிப்பட்டியில் இருந்து புறப்பட்டு தேனி வந்தார். தேனி பங்களாமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்காக பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 21 ஆயிரம் டன் பாறைகளை வெடி வைத்து தகர்த்து, சுரங்கம் அமைக்கப்போகிறார்கள். அந்த சுரங்கத்தில் அணுக்கழிவுகளை கொட்டப்போகிறார்கள். உலகிலேயே பெரிய ஆய்வுக்கூடம் இதுதான்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என தெரிந்தும், மோடியோடு சதி நாடகம் நடத்தி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர விடாமல் செய்தது போல், நியூட்ரினோ திட்டத்துக்கும் அனுமதி அளித்து விடாதீர்கள். அப்படி செய்தால் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனுக்கு நேர்ந்த பழிச்சொல் தான் உங்களுக்கும் வரும்.
நியூட்ரினோ திட்டத்தை தடுப்பது எளிதான காரியம் இல்லை. இந்த திட்டத்தை எதிர்த்து போராட வீட்டுக்கு ஒருவர் முன்வர வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக் காக திரண்டு வந்தது போல், மக்கள் திரண்டு வர வேண்டும். இத்திட்டத்தை எதிர்த்து சர்வ பலி தியாகத்துக்கும் நான் தயாராக உள்ளேன்.
எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இந்த மண்ணை காப்பாற்ற வர வேண்டும். ராணுவமே வந்தாலும் எதிர்த்து நிற்போம். இந்த திட்டத்தை மேற்கு தொடர்ச்சி மலையில் எங்குமே செயல்படுத்தக்கூடாது. குஜராத் மக்களின் மீதும் எனக்கு அக்கறை உள்ளது. ஒரு பேச்சுக்கு தான் கேட்கிறேன், பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டியது தானே. தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் விஞ்ஞானத்துக்கு விரோதிகள் அல்ல. மக்களுக்கு விரோதமான விஞ்ஞானத்துக்கு விரோதிகள். மண்ணுக்கு விரோதமான விஞ்ஞானத்துக்கு விரோதிகள். எங்கள் மரபுகளை அழிக்கப்பார்க்கும் விஞ்ஞானத்துக்கு விரோதிகள். இந்த அடிப்படை துகள்களை கண்டறிவதற்காக தான் அம்பரப்பர் மலை ஒரு சல்லடையாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த அம்பரப்பர் மலையின் புவியியல் வயது 8 கோடி ஆண்டுகள். எங்கள் வீட்டில், எங்கள் தாத்தா பயன்படுத்திய ஒரு மண்வெட்டி, ஒரு கலப்பையை வைத்துள்ளோம். இதை தொட்டாலே என் ரத்தம் கொதிக்கிறதே. 8 கோடி ஆண்டுகளாக இந்த மண்ணுக்கு நீர் கொடுத்த தாய், நதிகளை இறக்கிக் கொடுத்த தாய், எங்களுக்கு கவிதை கொடுத்த கருவூலம். அதை எப்படி தொட விடுவோம்?
வைரமுத்துவை எழுத வைத்தது, பாரதிராஜாவை சிந்திக்க வைத்தது, இளையராஜாவுக்கு இசை கொடுத்தது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலை மட்டும் இல்லை என்றால், நாங்கள் வறண்ட பாலைவனத்தின் பிள்ளைகளாக இருந்திருப்போம்.நான் மத்திய அரசிடம் கேட்க விரும்புகிறேன். இத்திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்குகிறீர்கள். இந்த மக்களின் அடிப்படை தேவைகள் தீர்ந்து இருக்கிறதா?. மக்கள் எல்லோருக்கும் குடிநீர் கிடைத்து விட்டதா?. எல்லோருக்கும் உணவு கிடைத்து விட்டதா? செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்று யோசிக்கிறீர்களோ, அடுத்த ஊரில் மனிதன் வாழ முடிகிறதா என்று யோசித்தீர்களா?
எங்களுக்கு சில கேள்விகள் உண்டு. திட்டத்துக்கான தண்ணீர் எங்கிருந்து கொண்டு வரப்போகிறீர்கள்? பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடும். பறவைகள் சாகும். ஆயிரம் டன் ஜெலட்டின் வெடி மருந்துகள் பயன்படுத்தப் போகிறார்களாம்.
வளர்ந்த நாடுகளின் கழிவுகளுக்கு குப்பைத் தொட்டி தேவை. வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியில் ஒன்றாக இந்தியாவை கருதுகிறார்களா? அணுக்கழிவுகளை கொட்டி வைக்க இது ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற எங்களின் சந்தேகங்களுக்கு விடை உண்டா? எங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தயாரித்து இந்திய ஊடகங்களிலும், உலக ஊடகங்களிலும் எங்களுக்கு விடை தெரிவித்து விட்டால், நாங்கள் அந்த விடைகளுக்கு விடை தர தயாராகி விடுவோம். இந்த மண்ணில் எதையும் இழப்போம். மண்ணை இழக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story