தரமற்ற உணவு வழங்குவதாக கூறி மத்திய பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டம்
தரமற்ற உணவு வழங்குவதாக கூறி திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறுதுறையில் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியில் உணவுகள் தரமற்றவையாக உள்ளதாகவும், இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மாணவ-மாணவிகள் நேற்று பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் கட்டிடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
போராட்டத்தின்போது தற்போது உணவகம் நடத்துபவரின் ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவு தயாரிக்கும் உணவக ஒப்பந்தகாரருக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் போராட்டத்தினால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story