காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது டி.ஆர்.பாலு பேச்சு
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது என்று டி.ஆர்.பாலு கூறினார்.
மன்னார்குடி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அ.தி.மு.க. நாடகம் ஆடுகிறது. நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வருவதை தடுப்பதற்காகவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக போராடியது போன்று செயல்பட்டது.
‘ஸ்கீம்’ என்று குறிப்பிடுவது எந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக வழக்கு போடப்பட்தோ அந்த பிரச்சினையைத்தான் குறிக்கும். அதை விடுத்து தற்போது புது விளக்கம் தரப்படுவது திசை திருப்பும் செயல். காவிரி பிரச்சினைக்கு உறுதியான இறுதியான தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுதால் மட்டுமே ஏற்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தி.மு.க. போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட திரளான தி.மு.க வினர் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று கொரடாச்சேரி தபால் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, தமிழகத்தின் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் மாவட்ட பிரதிநிதி யுவராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், ஒன்றிய துணை செயலாளர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல் தபால் நிலையம் முன்பு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குடவாசல் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர் ஆதித்யாபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் கெரக்கொரியா, ராமதாஸ், இன்பநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story