நிலுவைத்தொகை வழங்கக்கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நிலுவைத்தொகை வழங்கக்கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 3:15 AM IST (Updated: 4 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

நிலுவைத்தொகை வழங்கக்கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த நிலுவைத்தொகை மற்றும் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய பல்வேறு நிலுவைத்தொகைகளை காலங்கடத்தாமல் விரைந்து வழங்கவேண்டும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நியமன விதி அடிப்படையில் உடனடியா நிரப்பி பதவி உயர்வு காலத்தோடு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை மாநில ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதார ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

கூட்டுட நடவடிக்கைக்குழு தலைவர் ஜானகி, பொதுச் செயலாளர் அன்புசெழியன், பொருளாளர் கணபதி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனை முன்பும், 11-ந்தேதி மலேரியா உதவி இயக்குனர் அலுவலகம் முன்பும், 18-ந்தேதி ஓமியோ, சித்தா இயக்குனர் அலுவலகம் முன்பும், 24-ந்தேதி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடக்கிறது. 

Next Story