மான்கூர்டில் மாயமான சிறுவன் பிணமாக மீட்பு
மான்கூர்டில் மாயமான சிறுவன் வீட்டருகே உள்ள கட்டிடத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
மும்பை,
மும்பை மான்கூர்டு, மண்டாலா குடிசை பகுதியை சேர்ந்த சிறுவன் ஜீட்மோகன் சர்மா(வயது11). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை பார்க்க வெளியே கிளம்பிச் சென்றான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஜீட்மோகன் சா்மா வீட்டருகே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக கிடந்தான். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடலில் காயங்கள் எதுவுமில்லை. அவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகே உறுதியான தகவல் கிடைக்கும் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மாயமான சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் மான்கூர்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story