ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது


ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
x
தினத்தந்தி 4 April 2018 4:12 AM IST (Updated: 4 April 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

மரங்களை வெட்ட அனுமதி வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

புனே,

புனேயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்து இருந்தார். இந்தநிலையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருமாறு மாநகராட்சி பூங்கா துறை அதிகாரி கலாஸ்கர் (வயது34) தொழில் அதிபரிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து தொழில் அதிபர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

பின்னர் அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்த யோசனையின்படி ரூ.40 ஆயிரத்தை கல்யாணி நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து கலாஸ்கரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மாநகராட்சி அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story