காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை புறநகரில் தி.மு.க. சார்பில் ரெயில்-சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை புறநகர் பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் தராத மாநில அரசை கண்டித்தும் சென்னை புறநகர் பகுதியில் நேற்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த பல்லாவரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக சென்று ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்
தாம்பரம் பஸ் நிலையம் அருகே தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சேலையூர் அருகே காமராஜபுரத்தில் செம்பாக்கம் நகர தி.மு.க. செயலாளர் ஏ.ஆர்.டி. லோகநாதன் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் வேளச்சேரி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
தி.மு.க. கூட்டணி கட்சியினரின் சாலை மறியல் காரணமாக அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, காமராஜபுரம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், பெருங்களத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவருமான எஸ்.சேகர் தலைமையில் பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பெருங்களத்தூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் அருகே வன்னியரசு தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பட்டினப்பாக்கம் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தி.மு.க. எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 64 பேரை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர் பகுதி தி.மு.க. சார்பில் ஆதம்பாக்கம் தில்லைகங்காநகர் உள்வட்ட சாலையில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தி.மு.க. செயலாளர் சந்திரன், குணா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி, காங்கிரஸ் நிர்வாகி நாஞ்சில் பிரசாத், சீதாபதி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதனால் பரங்கிமலை-வேளச்சேரி இடையே உள்வட்ட சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட மா.சுப்பிரமணியம், என்.ஆர்.தனபாலன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுபோல் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் பெருங்குடியில் பகுதி செயலாளர் பெருங்குடி ரவிசந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கிண்டி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதியிலும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திரு.வி.க. நகர் பஸ் நிறுத்தத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் 100 பெண்கள் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
புளியந்தோப்பு அடுத்த பட்டாளம் மணிக்கூண்டு அருகில் திரு.வி.க. நகர் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் திரு.வி.க. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தாயகம் கவி மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 40 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் துறைமுகம் தொகுதி தி.மு.க. சார்பில் பலராமன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 200 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.
திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி ஆகியோர் தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றை மறித்து அதன் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் நடந்து கொண்டிருந்தபோதே எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட தயாரானது. இதனால் ஆத்திரம் அடைந்த மறியலில் ஈடுபட்டு இருந்த கட்சியினர், மண்எண்ணெய் பேரலை தண்டவாளத்தில் தூக்கி போட்டும், ரெயில் முன்பு நின்றும் தடுத்தனர். இதனால் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு, மருதுகணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. மதிவாணன், ஏ.வி.ஆறுமுகம், ஆதிகுருசாமி உள்பட கூட்டணி கட்சியினர் ஆயிரம் பேரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான விஜயகுமார் தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுப்புகளை அமைத்தனர். ஆனால் அதையும் மீறி தடுப்புகளை தள்ளிவிட்டு தாவி குதித்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீசார் 50 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்து, 100 அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story