திருவள்ளூரில் புது வாழ்வு திட்டப்பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் புது வாழ்வு திட்டப்பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 3:54 AM IST (Updated: 5 April 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

துவாழ்வு திட்டப்பணியாளர்கள் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று புதுவாழ்வு திட்டப்பணியாளர்கள் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருணகிரி, பரசுராமன், சாயாதேவி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருள் டேனியல், மாவட்ட தலைவர் இளங்கோ, புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 12 ஆண்டுகள் உழைத்த புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு 10 மாதங்களாக வேலை இல்லை, ஊதியம் இல்லை, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story