பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 3:30 AM IST (Updated: 5 April 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்ட தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட பணியாளர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பூங்கொடி, பொருளாளர் கவுதமன், சிவபாலன், நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர் நாட்டுதுரை, வட்ட தலைவர் அனந்தகுமார், வட்ட செயலாளர் விஜயகுமார், அரியலூர் ஜீவியராஜ், பெரம்பலூர் முத்துவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். 12 ஆண்டு உழைத்த புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story