முழுஅடைப்பு போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது கடற்கரை வெறிச்சோடியது
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
கன்னியாகுமரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. காந்தி மண்டப பஜார், பார்க் வியூ பஜார், பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு, ரத வீதி, விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
முழு அடைப்பு காரணமாக கன்னியாகுமரிக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் முக்கடல் சங்கம கடற்கரை, கடைவீதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பகவதி அம்மன் கோவிலுக்கும் குறைவான பக்தர்களே வந்தனர்.
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் விவேகானந்தா, பொதிகை ஆகிய 2 படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. குகன் படகு கரையில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடந்தது.
கன்னியாகுமரியில் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story