விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

முழுஅடைப்பு போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

காவிரி மேலாண்மை அமைக்க மறுத்த மத்திய அரசையும் புதுவை கவர்னர் கிரண்பெடியையும் கண்டித்து புதுவையில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி ஆங்காங்கே சாலைமறியல், கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

புதுவை நெல்லித்தோப்பு சிக்னல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் துணை செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.

இந்த மறியல் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 159 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

முழுஅடைப்பினையொட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் நிர்வாகிகள் புதுவை நகரப்பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த அவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். தடுப்புக்கட்டைகளை அமைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதன்மீது ஏறிச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து 20 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story