அருப்புக்கோட்டையில் காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும்


அருப்புக்கோட்டையில் காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும்
x
தினத்தந்தி 6 April 2018 4:00 AM IST (Updated: 6 April 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மறியலில் ஈடுபட்ட 462 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, மீனவர் அணி செயலாளர் சொக்கலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் காத்தமுத்து, தாமஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் லட்சுமணன், ஜோதிமணி, ம.தி.மு.க. நிர்வாகி மணிவண்ணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மதார்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

முன்னதாக சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசின் அலட்சிய போக்கை கண்டித்து கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் அனைத்து கட்சி சார்பில் நடத்தி வருகிறோம். இந்த போராட்டம் தொடரும். மக்களும் எழுச்சியுடன் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

Next Story