வங்கியின் நுழை வாயிலை பூட்டி கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் 3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு
வந்தவாசியில் வங்கியின் நுழை வாயிலை பூட்டி கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியின் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. நகரில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் அரசு மருத்துவமனை சாலை, கோட்டை மூலை, பழைய பஸ் நிலைய பகுதி, தேரடி, புதிய பஸ் நிலைய கூட்டுப்பகுதி, 5கண்பாலம் ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. உள்பட 191 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்யூனிஸ்டு கட்சியினர் வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கியின் நுழை வாயிலை பூட்டி அதன் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். பின்னர் அங்கு வந்த போலீசார் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு
வந்தவாசியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ், விழுப்புரத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் அரசு பஸ், புதிய பஸ் நிலைய கூட்டுப் பகுதியில் ஒரு அரசு பஸ் என மொத்தம் 3 பஸ்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் வந்தவாசி நகரில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். வந்தவாசி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பொற்செழியன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story