தமிழகத்தின் போராட்ட தந்திரத்திற்கு மத்திய அரசு அடிபணியக்கூடாது சித்தராமையா பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்தின் போராட்ட தந்திரத்திற்கு மத்திய அரசு அடிபணியக் கூடாது என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழகம் அதிக அழுத்தம் கொடுக்கிறது. தமிழகத்தின் இந்த போராட்ட தந்திரத்திற்கு மத்திய அரசு அடிபணியக்கூடாது. இதற்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனால் இப்போது அதே சுப்ரீம் கோர்ட்டு, ‘ஸ்கீம்‘ அமைக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளது. இதை தமிழகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
‘ஸ்கீம்‘ என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பொருள் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்துவது தான் அதன் அர்த்தம். இதை தான் மத்திய அரசு ஏற்க வேண்டும். சட்டத்தின்படியும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பின்படியும் மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை தோற்கடிப்பதாக குமாரசாமியும், எடியூரப்பாவும் கூறுகிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டனர் என்று தான் எனக்கு தோன்றுகிறது. 2006-ம் ஆண்டு அவர்கள் 2 பேரும் ஒன்றாக இருந்தபோது அந்த தொகுதியில் வெற்றி பெற்றது யார்?. எடியூரப்பா, குமாரசாமி ஆகிய 2 பேரும் ஒன்று சேர்ந்தாலும், நான் வெற்றி பெறுவது உறுதி.
தேவேகவுடா, எடியூரப்பா, குமாரசாமி ஆகிய மூன்று பேரும் எப்போதும் எனக்கு எதிராகவே பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் மட்டுமே இலக்கு. தேர்தலில் நாங்கள் முறைகேடு செய்வதாக தேவேகவுடா தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார். தேர்தல் அரசியலில் தேவேகவுடாவுக்கு அனுபவம் உள்ளது. அவர் இதற்கு முன்பு செய்ததை இப்போது சொல்கிறார்.
தேர்தல் முறைகேடுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்தவில்லை. இதை நான் எப்போதும் செய்தது இல்லை. இப்போதும் அதை செய்யமாட்டேன். மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு நான் எந்த அதிகாரிகளையும் அழைத்து பேசவில்லை.
தலைமை செயலாளரை தவிர வேறு எந்த அதிகாரியையும் சந்திக்க மாட்டேன். நடிகர் சுதீப் என்னை சந்தித்து, திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்து மத்திய தேர்தல் பரிசீலனை குழுவுக்கு அனுப்பி உள்ளோம். அந்த குழு, பெயர்களை பரிசீலித்த பிறகு கட்சியின் மத்திய தேர்தல் குழுவுக்கு அந்த பெயர்கள் செல்லும். மத்திய தேர்தல் குழு தான் வேட்பாளர் பட்டியலை வெளியிடும். கட்சியின் கொள்கைகள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை முன்வைத்து மக்களின் ஆதரவை பெறுகிறோம்.
தேவேகவுடா, குமாரசாமி போல் நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்படுவது இல்லை. பாதாமி உள்பட வட கர்நாடகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு வந்திருப்பது உண்மை தான். அதுபற்றி நான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சிலர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி எங்களுடையது தான் என்று கூறுகிறார்கள். அவர்கள் கனவுலகில் மிதக்கட்டும். அதற்கு எங்களது ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Tags :
Next Story