ஆம்பூரில் தம்பதியர் மீது அமர்ந்து உணவு அருந்தி செல்லும் காகங்கள்
ஆம்பூர் சாணாங்குப்பம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பாப்பாரகெங்கையமன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புற பகுதியில் உள்ள தெருவில் சிறியதாக பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஓம்சக்தி சாமுவேல் (வயது 58).
ஆம்பூர்,
ஓம்சக்தி சாமுவேலின் மனைவி ஜாய்சி. பாப்பார கெங்கையம்மன் கோவிலில் பெரிய வேப்பமரம் உள்ளது. அந்த வேப்பமரத்தில் காகங்கள் அதிகளவில் இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓம்சக்தி சாமுவேல் - ஜாய்சி தம்பதியினர் காகங்களுக்கு உணவு வைக்க ஆரம்பித்தனர். நாட்கள் செல்ல, செல்ல அதில் 2 காகங்கள் மட்டும் இந்த தம்பதியினர் கையில் அமர்ந்து கையில் வைத்திருக்கும் உணவு மற்றும் தானியங்களை சாப்பிட்டு செல்ல ஆரம்பித்தது. இப்போது அந்த காகங்கள் அவர்களது கழுத்து மீதும் தலைப்பகுதியிலும் நின்று அந்த உணவை சாப்பிடுகிறது.
தற்போது தினமும் 3 வேளைகளிலும் குறிப்பாக காலை 6.30 மணி, பிற்பகல் 11.30 மணி, மாலை 5.30 மணி ஆகிய 3 நேரமும் தவறாமல் வந்து தம்பதியினர் கையில் நின்று காகம் உணவு அருந்தி செல்வதை வழக்கமாக்கி விட்டது. இதனை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

Related Tags :
Next Story