காவிரி தண்ணீர் பங்கீட்டை அரசியல் ஆக்குவதை கைவிடுங்கள் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
காவிரி தண்ணீர் பங்கீட்டை அரசியல் ஆக்குவதை கைவிடுங்கள் என்றும், காவிரி நதிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
பெங்களூரு,
நடிகர் பிரகாஷ்ராஜ் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதவாத கட்சிகளால் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கட்சிகள் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வன்முறைக்குள்ளாக நேரிடும். புதிய கட்சியை தொடங்கும் எண்ணம் இல்லை. அதே போல் எந்த கட்சியிலும் சேரும் திட்டமும் இல்லை. நான் பிரச்சினைகளுக்கு எதிராக கேள்வி கேட்கிறேன்.கர்நாடகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவரை போல் நான் பணியாற்றுகிறேன். சிவமொக்காவில் நான் சென்ற இடத்தை கோமியம் போட்டு சுத்தம் செய்தனர். அவர்களுக்கு நான் தீண்ட தகாதவனாக இருக்கலாம். பிரதமர் மோடி, அவர்களுக்கு கடவுளை போல் தெரியலாம். நான் மோடிக்கு ஓட்டுப்போடாமல் இருந்தாலும், அவர் எனது தாய்நாட்டின் பிரதமர்.
அவரை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு உள்ளது. சமூக அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆயினும் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டேன். அநீதிக்கு எதிரான எனது போராட்டம் நாடு முழுவதும் நடைபெறும். சாதி வன்கொடுமை தடை சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது சரியல்ல.இந்த சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதனால் சிலர் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த சட்டத்தை முழுமையாக தடை செய்வது சரியல்ல. காவிரி நதிநீர் பங்கீட்டை அரசியல் ஆக்குவதை கைவிடுங்கள். காவிரி நதிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
Related Tags :
Next Story