காவிரி விவகாரத்தால் இரு மாநில உறவுகள் பாதிக்காமல் பார்த்து கொள்வது கர்நாடக அரசின் கடமை - ஜி.கே.வாசன்
காவிரி விவகாரத்தால் இருமாநில உறவுகள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்று திருச்சியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருச்சி,
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடை பெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். இதற்காக திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே உள்ள மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது.
நேற்று காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கியது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஞானதேசிகன், மாவட்ட தலைவர்கள் நந்தாசெந்தில்வேல், குணா, ரவீந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ரவிக்குமார் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், புலியூர் நாகராஜன், மன்னார்குடி ரங்கநாதன், விசுவநாதன், மகாதானபுரம் ராஜாராம், தீட்சிதர் பாலசுப்பிரமணியன் மற்றும் தொழில் அதிபர்கள் தர்மராஜ், வெங்கடேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைப்பதை தடுப்பதற்கும், நியாயம், சட்டம், கூட்டாட்சி இவைகளை மிதிக்கும் வகையிலும், மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் செயல்பட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்காத அரசாக தமிழக அரசு உள்ளது. இது அரசியல் பிரச்சினை அல்ல. விவசாயிகளின் பிரச்சினை, மக்களின் பிரச்சினை. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் உள்ள மக்கள் காவிரி நீரை பயன்படுத்துகிறார்கள். கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் கொல்லைப்புறமாக ஒன்று சேர்ந்து தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதை ஏற்க முடியாது.
இந்தநிலையில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளார்கள். காவிரி பிரச்சினைக்காக எந்தெந்த கட்சிகள் உணர்வுபூர்வமாக போராடுகின்றன. யார், யாரெல்லாம் உதட்டளவில் மட்டும் பேசுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். கன்னட அமைப்பினர் ரஜினி, கமல் திரைப்படங்களை கர்நாடகாவில் அனுமதிக்கமாட்டோம் என்றும், அவர்களை கர்நாடகாவுக்குள் நுழைய விடமாட்டோம் என்றும் கூறுவது கண்டனத்துக்குரியது.
ஒவ்வொரு மாநிலத்தில் இருப்பவர்கள் அந்த மாநிலத்துக்காக குரல் கொடுப்பது சகஜம். இது சட்டப்பிரச்சினை. தனிப்பட்ட பிரச்சினை அல்ல. காவிரி விவகாரத்தால் இருமாநில உறவுகள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கர்நாடக அரசின் கடமை. கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களாக இருந்து வருகிறார்கள். இந்த உறவு தொடர வேண்டும். இதில் அரசியலை புகுத்தி தனிப்பட்டவர்களை தாக்குவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வீணான நெற்பயிர்களை விவசாயிகள் உண்ணாவிரத பந்தலுக்கு கொண்டு வந்து கொட்டி ஜி.கே.வாசனிடம் நிலைமையை எடுத்து கூறினார்கள். தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஜி.கே.வாசன் பேசுகையில், “வருகிற 9-ந் தேதி உச்சநீதிமன்றம் காவிரி விவகாரம் தொடர்பாக நல்ல செய்தியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த செய்தி விவசாயிகளின் விடுதலை செய்தியாக இருக்க வேண்டும். 9-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பிக்க உள்ள உத்தரவுக்கு ஏற்ப, த.மா.கா.வின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்” என்றார். உண்ணாவிரதம் மாலையில் முடிவடைந்தது.

Related Tags :
Next Story