மாணவன் கொலை வழக்கு: 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததால் புவனகிரி வாலிபர் சிறையில் அடைப்பு
வெள்ளம்புத்தூர் மாணவன் கொலை வழக்கில் புவனகிரி வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம்,
வெள்ளம்புத்தூர் மாணவன் கொலை வழக்கில் கைதான புவனகிரி வாலிபர் தில்லைநாதன், 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, பெண்களிடம் நகை பறித்ததாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆராயி, அவரது மகள் தனம், 4-ம் வகுப்பு படித்து வந்த மகன் சமயன் ஆகிய 3 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதில் மாணவன் சமயன் இறந்தான். படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், மாணவனை கொலை செய்ததாக கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லைநாதனையும் (வயது 37), உடந்தையாக இருந்ததாக அவரது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தில்லைநாதனை கோர்ட்டு அனுமதியுடன் 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையின் போது அவரை திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பகுதிகளுக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் வெள்ளம்புத்தூர் காலனியில் கடந்த 12.9.2017 அன்று இரவில் வீடு புகுந்து ஒரு பெண்ணிடம் 5½ கிராம் தாலிச்சங்கிலியையும், டி.தேவனூரில் கடந்த 20.9.2017 அன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 6½ கிராம் தாலிச்சங்கிலியையும் பறித்துச்சென்றது தெரியவந்தது. அந்த வீடுகளை போலீசாருக்கு தில்லைநாதன் அடையாளம் காட்டினார். அதோடு எந்தெந்த தெரு வழியாக அந்த வீடுகளுக்கு சென்று சம்பவத்தை அரங்கேற்றினார் என்பதையும் போலீசாரிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து பெண்களிடம் நகை பறிப்பு தொடர்பாக தில்லைநாதன் மீது 2 வழக்குகளை அரகண்டநல்லூர் போலீசார் பதிவு செய்தனர். இந்த நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததையொட்டி விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் அவரை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story