திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
திருப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். காப்பாற்ற சென்ற கள்ளக்காதலன் படு காயம் அடைந்தார்.
திருப்பூர்,
திருப்பூர் நாராயணாபுரம் கோல்டன்நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி நவமணி (வயது 29). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் ரங்கநாதன் இறந்து விட்டார். இதன் பின்னர் நவமணி தனது குழந்தை களுடன் திருப்பூரில் உள்ள பெற்றோருடன் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது உடுமலையை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந் தித்து வந்துள்ளனர். பிரகாஷ் அவ்வப்போது நவமணியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதை பார்த்த அவருடைய பெற்றோர் நவமணியை கண் டித்துள்ளனர். இதுகுறித்து நவமணி தனது கள்ளக்காதலன் பிரகாசிடம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவரிடம் கூறியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட பிரகாஷ், உன்னை பெண் கேட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று நவமணியிடம் உறுதி யளித்துள்ளார். இந்த நிலை யில் நேற்று முன்தினம் நவமணியின் வீட்டிற்கு குடி போதையில் சென்ற பிரகாஷ் நவமணியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார்.
பிரகாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் நவ மணிக்கு இது கடும் ஆத் திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர் தனது கள்ளக்காதலன் பிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் விரக்தி அடைந்த நவமணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீ மளமளவென அவருடைய உடலில் பற்றி எரிந்தது. இத னால் ஏற்பட்ட வலியால் அவர் அலறி துடித்தார். திடீரென நவமணி தனது உடலில் தீவைத்ததை பார்த்த அவருடைய கள்ளக்காதலன் பிரகாஷ் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றார்.
அப்போது பிரகாசின் உடலிலும் தீ பிடித்தது. இருவரும் தீபற்றிய நிலையில் அலறி துடித்தனர். இவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி நவமணி பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிய நிலையில் பிரகாஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story