காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் பேரணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகள் மருத்துவகல்லூரி வளாகத்தில் இருந்து ஊர்வமாக புறப்பட்டு மருத்துவகல்லூரி-வல்லம் சாலைக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள், கல்லூரியின் மூன்றாவது கேட் பகுதியில் இருந்து முதல் கேட் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங் களை அனுமதிக்க கூடாது. காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை பார்த்த அந்த பகுதி பொதுமக்களும் மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இனி பொதுமக்களுடன் இணைந்து நாங்கள் போராடுவோம்”என்றனர்.

Related Tags :
Next Story