திருவண்ணாமலையில் பரபரப்பு வங்கியில் கல்விக்கடனுக்கு மறுத்ததால் விஷத்துடன் வந்த மாணவர்
கல்விக்கடன் வழங்கக்கோரி தற்கொலை செய்யப்போவதாக கூறி மாணவர் அவரது தந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி விஷ மருந்து பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பெருந்துறைப்பட்டு பேராயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வங்கியில் கல்வி கடன் பெற்றுத் தரக் கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்காக மனுவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது பிரசாந்த் அவரது கையில் ஒரு கடிதம் வைத்து இருந்தார். அந்த கடித்தத்தில், “கல்வி கடன் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் கையில் விஷ மருந்துடன் பாக்கெட் ஒன்றையும் வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லாததால், அவரது பங்களாவிற்கு சென்று அவர்கள் மனு அளித்தனர்.
முன்னதாக நிருபர்களிடம் முருகன் கூறியதாவது:-
ஸஎனது மகன் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். நாங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய உள்ளதால் எனது மகனின் கல்விக்காக கடன் கேட்டு வாணாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பித்து இருந்தோம்.
ஆனால் வங்கி மேலாளர் பல்வேறு காரணம் காட்டி எனது மகனுக்கு கல்விக் கடன் தர மறுத்து விட்டார். தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருவதால் எனது மகன் மனஉளைச்சல் அடைந்து உள்ளார். வருகிற 10-ந் தேதி எனது மகனுக்கு தேர்வு தொடங்குகிறது. அதற்குள் கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story