டெம்போ மோதி ஆட்டோ டிரைவர் சாவு சாலையில் படுத்திருந்த மாடுகளால் நேர்ந்த விபத்து
நாகர்கோவில் அருகே டெம்போ மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். சாலையில் படுத்திருந்த மாடுகளுக்காக விலகிச்செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே பறக்கையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், மதனிகா (3) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை மணிகண்டன், சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையம் நோக்கி சென்றார்.
தெற்கு கண்ணங்குளம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, சாலையில் படுத்தபடி ஏராளமான மாடுகள் கிடந்தன. இதனால் மாடுகள் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பினார்.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து குளத்துவிளை நோக்கி வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணிகண்டன் இடிபாடுகளுக்குள் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட டெம்போ டிரைவர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கியபடி மணிகண்டன் பிணமாக கிடந்தார். அவரை உடனடியாக மீட்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து மணிகண்டனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை தேடிவருகிறார்கள்.

Related Tags :
Next Story