எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் காரிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தி.மு.க. கூட்டணி கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்திலும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தநிலையில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் பச்சியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதையன், மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகி ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக அரசு, மத்திய அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட தொழில் நுட்ப பிரிவு விக்னேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பச்சியப்பன், பொன்னுசாமி, நாகராஜ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story