கூட்டுறவு சங்க தேர்தல் தகராறு: அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
மன்னார்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் தகராறில் அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அ.தி.மு.க.வினர் அடித்து உடைத்தனர்.
சுந்தரக்கோட்டை,
திருவாருர் மாவட்டம், மன்னார்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக அ.தி.மு.க.வினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் மன்னார்குடி 13-வது வார்டு அ.தி.மு.க. செயலாளார் மதன் (வயது 36) நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு செல்வதற்காக பந்தலடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சரவணசெல்வன், நகர செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் மற்றும் பலர் மதனை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மதனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உடனே மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் கீழராஜவீதியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக 13-வது வட்ட செயலாளர் பிரகாஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வாணக்காரத்தெருவில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதுகுறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சரவணசெல்வனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நகர செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் உள்ளிட்ட 13 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பிரகாஷ் தனது வீட்டை அ.தி.மு.க.வினர் சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதனை அமைச்சர் காமராஜ் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story