நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட தயாராக வேண்டும் - வைகோ பேச்சு
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட தயாராக வேண்டும் என்று நடைபயணத்தின் போது வைகோ பேசினார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31-ந்தேதி மதுரையில் இருந்து விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கினார்.
8-வது நாளான நேற்று, உத்தமபாளையம் அருகே உள்ள தே.சிந்தலைச்சேரியில் காலை 6.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:-
நியூட்ரினோ ஆய்வு மையத்தில் பாறைகளை தகர்க்கும் போது, முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணையில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்படும். தேனி மாவட்டத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, வெண்ணியாறு மற்றும் வைகை அணை உள்ளிட்ட அணைகள் பாதிக்கப்படும்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தில் அணுக்கழிவுகளை கொட்டுவது தான் மத்திய அரசின் திட்டம் என்பது தொடக்கத்தில் தந்த அறிக்கையில் உள்ளது. இந்த மையத்தில் இருந்து உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள அணுகுண்டு, நைட்ரஜன் குண்டு உள்ளிட்ட அணு ஆயுதங்களை செயல் இழக்கவோ அல்லது வெடிக்க செய்யவோ முடியும்.
உலகில் அணு ஆயுத போர் மூளும் நிலை ஏற்பட்டால் அம்பரப்பர் மலை மீது தான் முதல் அணு குண்டு வீசப்படும். இந்த ஆய்வு மையத்துக்கு, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இதற்கு அனுமதி அளித்து விடாதீர்கள்.
மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக இல்லாவிட்டால் நாம் கடினமான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் இளைஞர்கள் தயாராக வேண்டும். துப்பாக்கி சூடு நடைபெற்றாலும் பின்வாங்காமல் போராட வேண்டும். இந்த யுத்த களத்தில் முதல் ஆளாக நான் இருப்பேன். என்னை சுட்ட பிறகு தான் மற்றவர்களை சுட முடியும். தாய் மண்ணை காக்கவும், இனி வரும் சந்ததிகளை பாதுகாக்கவும் இளைஞர்கள் அணி திரளவேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
இதனையடுத்து உத்தமபாளையத்தில் நிருபர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கமாட்டேன். என்னுடைய போராட்டங்கள் தினமும் பத்திரிகைகளில் வருகின்றன. மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறையினர் உடனடியாக தகவல்களை சேகரித்து அனுப்பி வருகின்றனர். அதனை பார்த்து அவர் தெரிந்து கொள்ளட்டும்.
மாநில அரசை தனது கைக்குள் போட்டு கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு துடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மேற்கொள்ளும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் நடைபயணத்தில் ம.தி.மு.க. பங்கேற்காது.
எங்களது கட்சியினர், தி.மு.க. செயல்தலைவருக்கு முழு ஆதரவளித்து எல்லா இடங்களிலும் வரவேற்பு தந்து வருகின்றனர். நியூட்ரினோ எதிர்ப்பு கூட்டத்தின் இறுதி நாளான 10-ந் தேதி உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவின் உறுப்பினராக உள்ள விஞ்ஞானி பத்மநாபன் கலந்து கொண்டு இதன் பாதிப்புகளை பற்றி விளக்கி கூறவுள்ளார். கூடலூரில் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story