அபராதம் செலுத்தாமல் தப்பிக்க பெண் போலீசை காருடன் இழுத்து சென்றவர் கைது


அபராதம் செலுத்தாமல் தப்பிக்க பெண் போலீசை காருடன் இழுத்து சென்றவர் கைது
x
தினத்தந்தி 9 April 2018 3:19 AM IST (Updated: 9 April 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

அபராதம் செலுத்தாமல் தப்பிக்க பெண் போலீசை காருடன் இழுத்து சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை, மான்கூர்டு டி.ஜங்ஷன் பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை பெண் போலீஸ் துர்கா நிறுத்தினார். அவர் கார் டிரைவர் மது குடித்து உள்ளாரா என்பதை பீரித் அனலைசர் மூலம் சோதனை செய்தார். அப்போது காரை ஓட்டி வந்தவர் மது குடித்து இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க எண்ணிய காரில் இருந்தவர், கார் கண்ணாடியை மூடிவிட்டு வண்டியை எடுத்தார். அப்போது பெண் போலீசின் கை காருக்குள் சிக்கியது.

இதனால் பெண் போலீஸ் காருடன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். மேலும் அவர் வைத்திருந்த பீரித் அனலைசர் கருவியும் கீழே விழுந்து உடைந்தது. இந்தநிலையில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் பெண் போலீஸ் சுதாரித்துக்கொண்டு காரில் சிக்கிய கையை லாவகமாக வெளியே எடுத்து தப்பினார். இதனால் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை

இந்தநிலையில் மற்ற போலீசார் அந்த காரை துரத்தினர். அவர்கள் வாஷி சுங்கச்சாவடி வரை சென்று அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுகுடித்துவிட்டு அபராதம் செலுத்தாமல் தப்பிக்க முயன்றவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் மகேந்திர பவார் (வயது39) என்பது தெரியவந்தது.

Next Story