காரைக்குடி அருகே தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற 3 பேர் கைது
காரைக்குடி அருகே தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 55), கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகவேலு(28). இவர்கள் 2 பேரும் வேலை தொடர்பாக அருகில் உள்ள கானாடுகாத்தான் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேத்தாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். தேத்தாம்பட்டி அருகில் அவர்கள் வந்தபோது, செட்டிநாடு ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பழனிவேல்(37), வடலூரைச் சேர்ந்த ஜேசுதாஸ்(37), திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த முருகன்(36) ஆகியோர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மோதுவதுபோல் பழனியப்பன் சென்றுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த பழனிவேல், ஜேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோர் சேர்ந்து கல்லால் பழனியப்பனையும், சண்முகவேலுவையும் தாக்கினர். இதில் நிலைகுலைந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து பழனிவேல் உள்பட 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து சாலையில் சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனியப்பன் இறந்துபோனார். சண்முகவேலுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிந்து பழனிவேல், ஜேசுதாஸ், முருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.

Related Tags :
Next Story