வறட்சியால் விவசாயம் பாதிப்பு: உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் மனு
வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி கல்கிணற்றுவலசை முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமானோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கல்கிணற்றுவலசை மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற போது நான் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்தோம்.
இதன்பின்னர் வேட்புமனு பரிசீலனை நடைபெறாமலேயே 7 பேர் தேர்வு செய்துவிட்டதாக தெரிவித்தனர். 10 பேரை எவ்வாறு நிராகரித்தனர் என்ற காரணம் தெரிவிக்கவில்லை. எனவே, முறையற்ற முறையில் நடைபெற்ற இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டு மூலம் மேல்நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
அபிராமம் அருகே உள்ள ஆர்.சோடனேந்தல் பகுதியை சேர்ந்த முருகேசன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கடந்த ஆண்டு நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்த நிலையில் மழையின்றி விவசாயம் அடியோடு பொய்த்து போனது. ஒரு மூடை நெல் கூட விளையவில்லை.
பாப்பாங்குளம், புதூர், உடையநாதபுரம், ஆணையூர், சடையனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்கள் இவ்வாறு மழையில்லாமல் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே முறையாக ஆய்வு செய்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story