தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலில் மோதல் போலீஸ் தடியடி
இனுங்கூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
நச்சலூர்,
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்தது. 3-ம் கட்டமாக மாவட்டத்தில் 104 கூட்டுறவு சங்கங்களுக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் 3-ம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இனுங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் நேற்று காலை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். முதலில் தி.மு.க.வினர் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி விமலாதித்தனிடம் தாக்கல் செய்தனர். அப்போது மனுத்தாக்கல் செய்ததற்கு ரசீது தரும்படி தேர்தல் அதிகாரியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரசீது தராததால் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அ.தி.மு.க.வினர் மனு தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஆனது. இதனால் அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டது.
அப்போது சங்க அலுவலகத்தின் ஜன்னல், கதவு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினருக்கு காயம் ஏற்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர் பாலன் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மோதல் தீவிரம் அடைந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிச்சைராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால், லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மோதல் சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story