தி.மு.க. தொண்டர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


தி.மு.க. தொண்டர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 April 2018 3:45 AM IST (Updated: 10 April 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே தி.மு.க தொண்டரை வெட்டி கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அம்மையப்பன் மேலத்தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் இளையராஜா(வயது 28). இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன்கள் பிரேம் ஆனந்த்(28), சின்னமணி என்கிற பிரேம்நாத்(20)).

இவர்கள் இருவரும் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி பட்டப்பகலில் அம்மையப்பனில் உள்ள ஒரு மீன் கடை அருகில் நின்று கொண்டிருந்த இளையராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து பிச்சமுத்து கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம் ஆனந்த், பிரேம்நாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கலைமதி இளையராஜா, குற்றம் சாட்டப்பட்ட பிரேம் ஆனந்த், பிரேம்நாத் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து போலீசார் பிரேம்நாத், பிரேம் ஆனந்த் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story