காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏரிக்குள் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை அருகே ஏரிக்குள் இறங்கி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 13 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி, காத்திருப்பு போராட்டம், தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூரில் உள்ள ஏரிக்குள் விவசாயிகள் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர்.
இதில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், சமவெளி பாதுகாப்பு சங்க தலைவர் பழனிராஜன், வக்கீல் நல்லதுரை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் உலகநாதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த குலோத்துங்கன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த காத்திருப்பு போராராட்டத்தில் கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், களிமேடு, ராயந்தூர், குணமங்கலம், சித்திரக்குடி, சித்தாவயல், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். கள்ளப்பெரம்பூர் ஏரி 670 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 662 ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பவில்லை. இதனால் இந்த பகுதியில் சாகுபடி பொய்த்து விட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் திறந்து விட்டால் இந்த ஏரி நிரம்புவதோடு, இந்த பகுதியில் 2 போகம் அல்ல 3 போகமும் சாகுபடி நடைபெறும். மேலும் ஏரியை தூர்வாரி கரைகளை பலப் படுத்த வேண்டும்”என்றனர்.

Related Tags :
Next Story