மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக செய்வதையும், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசை கண்டித்தும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், ஊத்தங்கரை ஒன்றிய முன்னாள் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வின்சென்ட் வரவேற்று பேசினார்.

கோஷங்கள்

இதில் மத்திய அரசை கண்டித்தும், தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசுதுரை, நாராயணமூர்த்தி, நிர்வாகிகள் ரகு, ராமநாதன், வட்டாரத் தலைவர்கள் ராமன், ஜெயவேல், சித்திக், விவேகானந்தன், ஜேக்கப், ரவிச்சந்திரன், நகர தலைவர் ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கிருஷ்ணகிரி வட்டார தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


Next Story