பிரசார வேன் மீது கல்வீசப்பட்ட வழக்கு: டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோர்ட்டில் சாட்சியம்
பிரசார வேன் மீது கல்வீசப்பட்ட வழக்கு: டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரி கோர்ட்டில் சாட்சியம்.
தர்மபுரி,
பாராளுமன்ற தேர்தல் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றபோது தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தர்மபுரிக்கு பிரசார வேனில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெத்தூர் என்ற இடத்தில் அந்த வேன் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கினார்கள். இதில் வேன் கண்ணாடி உடைந்தது. வேன் டிரைவர் பாபுவிற்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்காக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று பிற்பகல் தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அங்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் முன்னிலையில், பெத்தூரில் பிரசார வேன் மீது கல்வீசப்பட்ட சம்பவம் குறித்து ½ மணி நேரம் சாட்சி அளித்தார்.

Related Tags :
Next Story