விமான நிறுவனத்தில் 518 பணியிடங்கள்


விமான நிறுவனத்தில் 518 பணியிடங்கள்
x
தினத்தந்தி 10 April 2018 10:48 AM IST (Updated: 10 April 2018 10:48 AM IST)
t-max-icont-min-icon

விமான நிறுவனத்தில் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 518 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கணிசமான பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கீழ் செயல்படும் துணை நிறுவனம், ‘ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்’. தற்போது இந்த நிறுவனத்தில் கண்ணூர் விமான நிலையத்தில் கிரவுண்ட் டியூட்டி அலுவலக பணிகளுக்கு அதிகாரி மற்றும் அலுவலர்கள், பணியாளர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 518 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இதில் ஹேண்டிமேன், ஹேண்டி உமன் பணிகளுக்கு மட்டும் 310 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர ஜூனியர் எக்சிகியூட்டிவ் அதிகாரி, டெர்மினல் மேனேஜர், உதவி டெர்மினல் மேனேஜர், சீனியர் கஸ்டமர் ஏஜெண்ட், ஜூனியர் கஸ்டமர் ஏஜெண்ட் உள்ளிட்ட அதிகாரி - அலுவலர் பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

கேண்டிமேன், கேண்டிஉமன் பணி களுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். டெர்மினல் மேனேஜர் உள்ளிட்ட சில பணிகளுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

கேண்டிமேன், கேண்டி உமன் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி அறிவு அவசியமாகும். பிளஸ்-2 படித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும், ஏர்போர்ட் அட்மின் படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை

குழு கலந்துரையாடல் மற்றும் நேர் காணல், எழுத்து தேர்வு , திறமைத் தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் மற்றும் தேர்வு 5-5-2018 முதல் 7-5-2018-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுகள் கேரள மாநிலம் கண்ணூரில் நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் ரூ.500 கட்டணத்தை டி.டி.யாக இணைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்ைத பதிவிறக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.airindia.in/ என்ற இணைய பக்கத்தைப் பார்க்கவும்.

Next Story