இன்று நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு வணிக நிறுவனங்கள் ஆதரவு தர வேண்டும் - ஜி.கே.மணி
போராட்டத்திற்கு வணிக நிறுவனங்கள் ஆதரவு தர வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
சேலம்,
இன்று நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு வணிக நிறுவனங்கள் ஆதரவு தர வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
சேலத்தில் நேற்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று புதன்கிழமை) காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவராக அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்ளார். இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு காவிரி நீர், குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் 12 டெல்டா மாவட்டங்களுக்கு உணவு உற்பத்திக்கான பாசனமாகவும் திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிக நிறுவனங்கள் கடைகளை அடைத்து முழு ஆதரவு தர வேண்டும். ஆதரவு கேட்ட இடங்களில் எல்லாம் சிலர் தாமாகவே முன்வந்து மதியம் வரை கடைகள் அடைப்பதாக எங்களிடம் உறுதியளித்து உள்ளனர். சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். எனவே அமைதியாக நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெறும் என அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து ஜி.கே.மணி, சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வினியோகித்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் அருள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கார்த்தி, கண்ணையன், மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், அண்ணாதுரை, துணை செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story