ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சினர் முற்றுகை 38 பேர் கைது


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சினர் முற்றுகை 38 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2018 7:47 AM IST (Updated: 11 April 2018 7:47 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கயத்தாறு சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கயத்தாறு,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று காலையில் கயத்தாறு நாற்கர சாலையில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

நகர செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சண்முகராசு, ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story