போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி முரண்பாடுகளை களைய கோரி ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி முரண்பாடுகளை களைய கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2018 7:48 AM IST (Updated: 11 April 2018 7:48 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி முரண்பாடுகளை களைய கோரி கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

அரசு போக்குவரத்து கழக ஒய்வூதியர்களின் அகவிலைப்படி முரண்பாடுகளை களைய கோரி கும்பகோணத்தில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கும்பகோணம் கோட்ட தலைவர் ஆர்.முத்துகுமாரசாமி தலைமை தாங்கினார். தஞ்சாவூர் கிளை தலைவர் ஞானசேகரன், நாகை கிளை தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை விட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் களுக்கு குறைவான அகவிலைப்படி வழங்கப்படுகிறது. எனவே ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், மின்வாரிய தொழிலாளர்களுக்கும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திய தமிழக அரசு, ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story