கிருஷ்ணகிரியில் பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து
கிருஷ்ணகிரி பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஆர்.எஸ்.லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 50), பழைய இரும்பு வியாபாரி. இவர் காந்தி சாலையில் பழைய பேப்பர், பழைய இரும்பு சாமான்கள், காலி மதுபாட்டில்கள் வைக்கும் குடோன் வைத்துள்ளார். அந்த குடோனில் இருந்து நேற்று திடீரென புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் குடோனுக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது குடோனில் உள்ள பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு, தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையில் வீரர்கள் ஆனந்தன், சற்குணன், பழனி, விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போலீசார் விசாரணை
இதில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பழைய இரும்புகள், பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீவைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story