காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாப்பாநாட்டில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும.் காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களை காவிரி படுகையிலிருந்து வெளியேற்ற வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். நியூட்ரினோ திட்டத்தை கைவிடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் பாப்பாநாட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story