மதுரையில் கத்தியால் குத்தப்பட்ட திருநங்கை சாவு


மதுரையில் கத்தியால் குத்தப்பட்ட திருநங்கை சாவு
x
தினத்தந்தி 12 April 2018 3:30 AM IST (Updated: 12 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருநங்கை பரிதாபமாக இறந்தார்.

மதுரை,

மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த திருநங்கை அல்போன்சா(வயது 24). இவருக்கும் காளவாசல் பகுதியை சேர்ந்த ஸ்டாலின்(26), அவரது தம்பி திலீபன் ஆகியோருக்கும் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வைத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அல்போன்சாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர்.

படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஸ்டாலின், அவரது சகோதரர் திலீபன் விடுதி உரிமையாளர் வைத்தியலிங்கம் ஆகிய 3 பேர் மீது செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அல்போன்சா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதைதொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் விடுதி உரிமையாளர் வைத்தியலிங்கம் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக உள்ள திலீபனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அவரது உறவினர் ஒருவர் கூறும்போது, அல்போன்சா வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். எனவே அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்யும்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார். 

Next Story