சரண் அடைந்த வாலிபரை இழுத்துச்சென்ற போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


சரண் அடைந்த வாலிபரை இழுத்துச்சென்ற போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

சரண் அடைந்த வாலிபரை இழுத்துச்சென்ற போலீசாரை கண்டித்து திருப்பூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட குனியமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்(வயது 29) என்பவர் திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் நேற்று முன்தினம் காலை சரண் அடைந்தார். இந்த நிலையில் மதியம் 12.30 மணி அளவில் சிங்காநல்லூர் போலீசார் திருப்பூர் வந்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-க்குள் புகுந்து அங்கிருந்த சந்தோசை வலுக் கட்டாயமாக இழுத்து வந்து காரில் ஏற்ற முயன்றதாக தெரிகிறது. சரண் அடைந்த வாலிபரை போலீசார் கோர்ட்டுக்குள் புகுந்து இழுத்து சென்ற சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் உள்ள வக்கீல்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். அதன்படி திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் ஆகிய 3 சங்கங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோர்ட்டுகளில் நேற்று வழக்குகள் விசாரணை பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story