எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வெடிக்கும் என போனில் பேசிய மர்மநபர் போலீசார் தீவிர சோதனை
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்டுள்ள குண்டு வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் வெடிக்கும் என மர்ம நபர் போனில் பேசியதால் வாணியம்பாடியில் ரெயில் நிறுத்தப்பட்டு சோதனை நடந்தது.
வாணியம்பாடி,
சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு பிற்பகல் 3.25 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும். அந்த ரெயில் நேற்று பிற்பகல் 3.25 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டது. இந்த நிலையில் அந்த ரெயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு ரெயில் வரும்போது குண்டு வெடிக்கும் எனவும் சென்னையில் உள்ள ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போனில் பேசியுள்ளார்.
இதனையடுத்து அந்த ரெயிலில் தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதற்குள் ரெயில் அரக்கோணத்தை வந்தடையவே அங்கு ரெயில்வே போலீசார் அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை நடத்தினர். அதேபோல் காட்பாடியிலும் ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடிக்கு ரெயில் நிலையத்துக்கு வரும்போது குண்டுவெடிக்கும் என தகவல் வந்ததால் அங்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஒரு குழுவினரும், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசாரும் ரெயில் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் மாலை 6.15 மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. பின்னர் 20 நிமிட சோதனைக்கு பிறகு மாலை 6.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில் “சென்னையில் இருந்து புறப்பட்ட திருவனந்தபுரம் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம தகவலை அடுத்து அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த ரெயில் நின்று செல்லும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் தகவல் தெரிவித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர். வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story