ஆரணி நகராட்சி முன்பு துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்


ஆரணி நகராட்சி முன்பு துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:00 AM IST (Updated: 12 April 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி துப்புரவு தொழிலாளர் நல சங்க தலைவர் ரவி தலைமையில், துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி,

ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி துப்புரவு தொழிலாளர் நல சங்க தலைவர் ரவி தலைமையில், துப்புரவு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை, துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கியும், அதனை தைக்க பணம் தரவில்லை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனையடுத்து ஆணையாளர் (பொறுப்பு) டி.நெடுமாறன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினர். அப்போது அதிகாரிகள், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story