கோவில் தேரோட்டம்: பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி கூறினார்.
திருச்சி,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றையதினம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தேரோட்டத்தை காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் போலீசாரும், கோவில் நிர்வாகமும், பேரூராட்சித் துறையினரும் இணைந்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
பக்தர்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்காக லாரிகள் மூலமும், நடமாடும் குடிநீர் வண்டிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதுடன், போதிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். பேரூராட்சி துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை, பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு தேவையான அளவு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
விபத்து மற்றும் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சமயபுரம் போலீஸ் நிலையம், தெப்பக்குளம், பள்ளிவிடைப்பாலம் மற்றும் அக்னி சட்டி இறக்கி வைக்கும் இடம் ஆகிய 4 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். சமயபுரம், நுழைவாயிலில் இருந்து தேரோடும் வீதி வரை குறிப்பாக தேரடி, பஸ் நிலையம் மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு மின்னணு விளம்பர பலகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமயபுரம் நுழைவு வாயில், சமயபுரம் போலீஸ் நிலையம், கோவில் திருமண மண்டபம் நுழைவு வாயில், கடைவீதி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்களும், ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். விழாநாட்கள் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும். கூடுதல் பஸ்களும் இயக்கப்பட வேண்டும்.
ஓட்டல்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதையும், தரமான, சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் சமைத்து வழங்கப்படுகிறதா? என்பதையும் கண்டறிய சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் முன்னதாக அனுமதி பெற வேண்டும். தேர்த்திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமரதுரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜூலு, உதவி இயக்குனர்(பேரூராட்சி) சதீஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story