காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று பா.ம.க. சார்பில் ரெயில் மறியல், போராட்டங்கள் நடைபெற்றது. அதன்படி கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் சுப.குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மேகநாதன், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் ரவி, ராஜாசெட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மத்திய மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் வரவேற்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக மக்களை காப்பாற்ற உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே கால தாமதம் செய்யும் மத்திய அரசை கண்டிக்கிறோம். தமிழகத்தில் இருந்து மின்சாரம் மட்டும் தேவை. தண்ணீரை தர மறுப்பது ஏன் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் கணேசன், ஹரிநாத் நாயுடு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மஞ்சுநாதன், மாணிக்கம், சுப்பிரமணி, காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தர்மராஜா கோவில் தெரு, பெங்களூரு ரோடு, 5 ரோடு ரவுண்டானா, சென்னை சாலை வழியாக பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்றனர். அப்போது அந்த பகுதியில் திறந்திருந்த கடைகளை மூட கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடைகள் அனைத்தும் அப்பகுதியில் மூடப்பட்டது.

Related Tags :
Next Story