பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் வயல்களில் கருப்புக்கொடியேற்றினர்
கும்பகோணம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டப்படும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் நகர செயலாளர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மடத்துத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல கும்பகோணத்தை அடுத்த தாராசுரம், பட்டீஸ்வரம், வளையபேட்டை, பட்டணம் ஆகிய ஊர்களில் உள்ள வயல்களில் விவசாயிகள் கருப்புக்கொடியை ஏற்றி வைத்தனர். கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் கருப்புக்கொடியேற்றப்பட்டது. கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் முன்னணியின் நகர அமைப்பாளர் பகத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மோடி முகமூடி அணிந்த ஒரு மாணவருக்கு செருப்பு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருப்பனந்தாளில் நேற்று தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள அணைக்கரை, பந்தநல்லூர், கதிராமங்கலம், கஞ்சனூர், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.
கும்பகோணம் அருகே நேற்று காலை திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, நாச்சியார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடியேற்றினர். திருபுவனத்தில் பேரூர் செயலாளர் எஸ்.கே.பஞ்சநாதன், திருவிடைமருதூரில் பேரூர் செயலாளர் சுந்தரசெயபால், ஆடுதுறையில் பேரூர் செயலாளர் கோ.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலையிலும், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் செ.ராமலிங்கம், சி.அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும் கோவி.செழியன் எம்.எல்.ஏ., கருப்புக்கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து கருப்புக்கொடியை ஏற்றி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவில் உள்ள அரசியல் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்துகொண்டனர்.
இதேபோல அம்மாப்பேட்டையில் ஒன்றிய நகர தி.மு.க வினர், ஒன்றிய நகர தி.மு.க. அலுவலகத்திலும் அம்மாபேட்டையில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடியேற்றினர். மேலும் அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் தியாக. சுரேஷ் தலைமையில் நகர செயலாளர் சரவணன் திரளான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் பாலக்கரை, திரவுபதி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடிகளை ஏற்றினர். அய்யம்பேட்டையிலும் சில இடங்களில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

Related Tags :
Next Story