100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை
100 நாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் மனு ஒன்றை கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா அரசு இத்திட்டத்தினை முடக்கிட முயற்சி செய்தது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடை பாதியாக குறைத்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியிலும் மிக குறைந்த நாட்கள் வேலையும், குறைந்த கூலியும், தாமதமான கூலி பட்டுவாடாவும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 100 நாள் வேலை திட்டத்தை ஏறக்குறைய முழுமையாக ரத்து செய்யும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முழுமையாக வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தை சீர் குலைக்க முயற்சிக்கும் அரசு உத்தரவினை திரும்ப பெற வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சிக்கான 150 நாள் வேலை வழங்கிட வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக வேலை மற்றும் கூலி கிடைக்க வேண்டும். இத்திட்டத்தை முறையாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.
இதேபோல் அருப்புக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பாலையம்பட்டி, திருவிருந்தாள்புரம், பந்தல்குடி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு முற்றுகையிட்டனர். இதில் விவசாய தொழிற்சங்க நிர்வாகி ரவிச்சந்திரன், கிளை செயலாளர் முத்திருளன், விவசாய தொழிற் சங்க மாநில குழு உறுப்பினர் பூங்கோதை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட மற்ற 8 ஒன்றிய அலுவலகங்களிலும் இதேபோன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 820 பெண்கள் உள்பட 980 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story