ஓமலூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 6 மாத காலமாக வேலை வழங்காததை கண்டித்து மனு கொடுத்து வேலை கேட்கும் ஆர்ப்பாட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஓமலூர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த 6 மாத காலமாக வேலை வழங்காததை கண்டித்து மனு கொடுத்து வேலை கேட்கும் ஆர்ப்பாட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஈஸ்வரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் மனு கொடுத்துவிட்டு கண்டன உரையாற்றினர். இதில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story