பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றினர்
பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினர். மந்தாரக்குப்பத்தில் மோடியின் உருவபடத்தை மனித நேய ஜனநாயக கட்சியினர் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திரமோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அனைத்துக்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டை அணிந்தும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். கடலூரில் நகர செயலாளர் ராஜா தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடலூர் பாரதி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் கருப்பு கொடி ஏற்றினர். தி.மு.க.வினர் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளிகள் 2 பேர் தங்கள் மோட்டார் சைக்கிளில் கருப்பு பலூன்கள் மற்றும் கருப்பு கொடிகளை பறக்க விட்டபடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோல் நெல்லிக்குப்பத்திலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழப்பட்டு கடைத்தெரு, நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் கருப்பு கொடி ஏற்றி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நெல்லிக்குப்பம், வாழப்பட்டு, கீழ்பாதி, மேல்பாதி, சோழவலிலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
விருத்தாசலத்தில் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தட்சணாமூர்த்தி, அறிவுடைநம்பி, பொன்கணேஷ், வக்கீல்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், இளங்கோவன், சிங்காரவேல் உள்ளிட்ட தி.மு.க.வினர் கணேசன் எம்.எல்.ஏ. வீடு, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராசு வீடு உள்பட பல்வேறு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதேபோல் வடலூர் பகுதியில் உள்ள வீடு, கடைகளிலும் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றினர். நெய்வேலி இந்திராநகரில் சென்னை-கும்பகோணம் சாலையில் உள்ள மின்கம்பங்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத நரேந்திரமோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி மந்தாரக்குப்பம் 4 முனை சந்திப்பில் மனித நேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் இப்ராகிம் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திரமோடியை கண்டித்தும் கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் நரேந்திரமோடி உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். இதை பார்த்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி, தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் தோழமை கட்சியினரும் கருப்பு சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை காட்டினர்.

Related Tags :
Next Story